மாலை போட வடசென்னைக்கு வாங்க...

சபரிமலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்கள் வடசென்னை சுங்கச்சாவடி அருகில் ஐயப்பன் கோவிலில் வரும் 16 ம்தேதி மாலை அணிந்து கொள்ளலாம் என்று அழைப்பு விளக்கப்பட்டுள்ளது


அன்று காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். மாலை அணிவிக்க வரும் பக்தர்கள் முடிந்தவரை உற்றார் உறவினர்களைத் தவிர்க்க கோவில் நிர்வாகம் வேண்டுகிறது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்திருத்தல் அவசியம். அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்ற வேண்டும். கோயிலுக்குள் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் அனுமதி கிடையாது.


நவம்பர் 16 அன்று காலையில் ஐயப்பனுக்கு உஷ பூஜை, உச்ச பூஜை, பகலில் நெய்யபிஷேகம், இரவில் மலர் பூஜை, அத்தாழ பூஜை, அரியாசனம் ஆகியவை நடைபெறும். 2014ஆம் ஆண்டு சுமார் 4 கிரவுண்டுகள் பரப்பளவில் கட்டப்பட்டது. வடசென்னை பக்தர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ஐயப்பன் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஐயப்பன், சுப்பிரமணியர், விநாயகர், துர்க்கை, பகவதி, நாகராஜர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோருக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன.வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை அன்று காலையில், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் போது வழங்கப்படுகிறது