நடிகர் கமல்ஹாசனின். 3வது அணி களத்திலேயே இல்லைஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
103 வது நவம்பர் புரட்சி தினமான சனிக்கிழமையன்று (நவ.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.அப்போது
நடிகர் கமல்ஹாசனின் மூன்றாவது அணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை 3வது அணி, 4வது அணிக்கெல்லாம் இடமில்லை. யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். அணி என்பதை பொறுத்தவரை பாஜக-அதிமுக ஒரு அணி. அதை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து ஒரு அணி அமைத்துள்ளன. இந்த இரு அணிகளுக்குள்தான் பிரதானமான போட்டி. 3வது, 4வது அணிகள் களத்தில் கிடையாது. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை" என்றார்
--