கடலில் மூழ்கி இறந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்

கடலில் மூழ்கி 5 மீனவர்கள் மரணம் : குடும்பத்தினருக்கு அமைச்சர்ஆறுதல்!


 


சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர்.அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாயமான 5 பேரையும் உயிருடன் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்.ஆனால் எவ்வளவோ போராடியும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது.


 


இதையடுத்து இறந்தவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் நேரில் சென்று இறுதிச்சடங்கு செய்ய தனது சொந்தப்பணத்தில் இருந்து தலா 10 ஆயிரம் வீதம் 50 ரூபாய் கொடுத்தார்.உயிரோடு மீட்டு விடலாம் என்று நினைத்தால் இப்படி பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டதை எண்ணி கண்கலங்கி அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இறந்து போன 5 பேரில் இருவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.அவர்களது உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்!