பீகாரில் பாஜகவுக்கு பட்டை நாமம்

பீகாரில் இறுதிக்கட்டத்தேர்தல் 7ம்தேதியோடு முடிந்து விட்டது .மாநிலத்தில் 234 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்து பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பு நடத்தின. இத்தேர்தலில் நிதிஷ்குமாரை முதல்வராக்குவோம் என்று பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.ஆனால் இது தான் எனக்கு கடைசி தேர்தல் என்று நிதிஷ் குமார் முழங்கினார்.இன்னொரு பக்கம்  தேஜஸ்வியை  முதல்வராக்க ஆர்ஜேடி காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தீவிரமாக உழைத்தார்கள் இது போதாதென்று ராம் விலாஸ் பஸ்வானின் மகன்  தலைமையில் மறைமுக பாஜக அணி உருவானது  இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் ஜெயிக்கிறதோ இல்லையோ பாஜக மிக அதிக சீட்டுகளை பிடிக்கும் என்று பல பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதின.ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் பீகாரில்  பாஜகவுக்கு பட்டை நாமம் தான் என்று அடித்துசொல்லி விட்டன.


பெரும்பாலான ஊடகங்கள லல்லு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி முதல்வராக வாய்ப்பு இருப்பதாக அறுதியிட்டு உறுதி கூறி விட்டன. சாணக்யா நியுஸ் 18 ஆ ர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 169முதல் 191 வரை பிடித்து ஆட்சியமைக்கும்  என்று கட்டியம் கூறியிருக்கிறது.பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி க்கு 44 முதல் 66தான் கிடைக்கும் என்று தெரிவிதிருக்கிறு 


டைம்ஸ் நல் சி வோட்டர் ஆர் ஜே டி அணிக்கு 108முதல் 131 சீட்டுகளும் பாஜக ஐக்கிய ஜனதாதளம் அணிக்கு 104 முதல்128இடஙகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது இந்தியா டுடே டிவி ஆர்ஜேடியின் மெகா கூட்டணி க்கு 139முதல் 161வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 69முதல்91 சீட்டுகள் கிடைக்கும் என்று கூறியுள்ளது  பாஜகவுக்கு ஆதரவான ரிபப்ளிக் டிவி கூட தேஜஸ்வி அணிக்கு 118 முதல்138 வரை கிடைக்கும் என்றும் பாஜக அணிக்கு 91 முதல் 117வரை வெற்றி பெறும் என்று முடிவுகளை  அறிவித்துள்ளது. டைனிக் பாஸ்கர் டிவி ஒன்று தான் 120முதல் 127வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்று பாஜக அணிக்கு ஆறுதல் அளித்து வருகிறது.இத்தொலைக்காட்சிகள் பெரும்பாலானவை தேஜஸ்வி தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்பாளர் என்று கூறியிருக்கின்றன. ஆக பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பட்டை நாமம் சாத்தப்போவது உறுதியாகி விட்டது. இனி வட மாநிலங்களில் சமூக வலைதளங்கள்  பாஜகவை சிம்ஸ் போட்டு கிண்டலடிக்க தொடங்குவார்கள். அங்கிருந்து தமிழகத்திற்கும் பரவும் மிம்ஸ்களால் தமிழகத்திலும் அதிமுக பாஜக அணி அப்போதாவது உறுதிஎன்கிறார்கள் லோக்கல் காங்கிரசு கட்சியினர்