வீ்டடிலிருந்தபடியே தீப தரிசனம்

 


திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீப விழாவில் கலந்துகொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, நாளை மறுநாள் வரை கிரிவலம் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆனால் தீப தரிசனத்தை வீட்டிலிருந்தபடியே யூடியூப் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, 


கொரோனா நோய்த்தொற்று பரவலைத்தொடர்ந்து  கடந்த மார்ச் மாதம் 25 ம்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பேருந்துகள் நிறுத்தப்பட்டன, ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமானங்கள் இதுவரை இயங்கவில்லை அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கிட்டதட்ட 5 மாதங்கள் கழித்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது, முதற்கட்டமாக கடைகள் திறப்புக்கு காலவரம்பு அதிகரிக்கப்பட்டது, கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு வழங்கப்பட்டு வருகிறது, கடைசியாக சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டு விட்டன, பள்ளி கல்லுாரிகள் திறக்கப்படும் தேதி மட்டும் தான் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்  திருவண்ணாமலையில்   ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும்  மகாதீப திருவிழாவில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும்  வாகனங்களு்கும்     தடை விதிக்கப்பட்டுள்ளது, நாளை மறுநாள் வரை கிரிவலம் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கடந்த 20 ம்தேதி கொடியேற்றம் நடைபெற்றது நாளை கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது, இதற்காக கோவிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீபக்கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது, நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபக்கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை காண நேரில் வரக்கூடாது என்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனினும் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே திருவண்ணாமலை தீபத்தை யூடியூப்களிலும்  தொலைக்காட்சிகளிலும் நேரலை மூலம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,   


இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: 
திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ம்தேதி கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,.  20 மற்றும் 30 நாட்களில் கிரிவலம் செல்லவும் தடை விதி்க்கப்பட்டுள்ளது,. மேலும் தீபத்திருவிழா நாளன்று  வெளியூர்களில்  பக்தர்கள்  மற்றும் பொதுமக்கள் நகருக்கு வருவது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது, எனவே தீபத்திருவிழாவை காண பக்தர்கள் திருவண்ணாமலைக்கு  வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்றும் கார்த்திகை தீபத்தையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோவிலில் உள்ள ஆதிபுரிஸ்வரர் திருக்கோவிலில் நாளை வெள்ளிக்கவசம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,