டெங்கு பரப்பும் குப்பைகள் கண்காட்சி

இங்கே குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க போகிறார்களா என்ன அல்லது குப்பைகளில் என்னென்ன வகைகள் இருக்கிறது என்று காண்பிக்க கண்காட்சி. நடத்த போகிறார்களா என்று தெரியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் இன்னொருபக்கம்  கிட்டத்தட்ட தெருவை ஆக்ரமித்து 5அடி தூரம் நடத்தப்படும் இந்த குப்பை கண்காட்சியால் தெருவே மூச்சு திணறிக்கொண்டிருக்கிறார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கொரோனா நோய்த்தொற்றால் இந்த தெருவில் மட்டும் 60பேர் பாதிக்கப்பட்ட தை பகுதி மக்கள் மறக்கவில்லை . அது மட்டுமல்ல   இன்னின்ன இணை நோய்கள் இருந்தால் கொரோனாவால்  பாதிக்கப்படுவது உறுதி என்று  மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதனால்  உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.


பிறகு ஏன் டெங்கு ,காலரா போன்ற நோய்களை  பரப்பும்  மாநகராட்சி நடத்துகிறது என்று தெரியவில்லை. கண்காட்சி நடக்கும்  வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை தண்டையார் பேட்டையை இணைக்கும் இடம் சோலையப்பன் தெரு, 


அப்பாசாமி தெரு,இது தாண்டவராயான் தெரு சந்திப்பு  அதாவது தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பின் பின் பக்கம்) இங்குள்ள மாநகராட்சி பள்ளியை திறப்பது குறித்து அண்மையில் தான் பெற்றோர்களை கூப்பிட்டு கருத்து கேட்கப்பட்டது.அப்போதும் இந்த கண்காட்சி பள்ளி குழந்தைகள் பெற்றோர்களை பார்வையாளர்களாக கொண்டு நடந்து  வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது