காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் தான் தனது மகன் படுகொலை செய்யப்பட்டதாக நிருபர் மோசஸ் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்
ஸ்ரீபெரும்பதூர் தொகுதி,பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஞானராஜ் ஏசுதாசின் மகன் மோசஸ், இவர் ஒரு தனியார் டிவியில் பகுதி நேர நிருபராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு 10:30 மணியளவில், தனது வீட்டின் அருகே நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு திரும்பும் போது, மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து மோசஸை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மோசஸின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவர் தந்தையும், தங்கையும் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.ரத்த வெள்ளத்தில் மோசஸை குரோம்பேட்டை அரசுமருத்துவமனை கொண்டு சென்றுனர். அங்கு மோசஸை பரிசோதனை செய்த மருத்துவர் ,அவர்ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அவரின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கூறியது "என் மகனுக்கு நிருபராக வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே கனவாக இருந்தது இந்த நிலையில், ஒரு தனியார் டி.வியில் வேலை செய்து வந்தார். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் தன்னுடைய செய்தியில்தவறுகளை சுட்டிக்காட்டிவான்.இதற்கிடையேஎங்கள் பகுதியில் கஞ்சா போதைக்கு சிறுவர்கள் அடிமையாகி வந்தனர் .சமூக ஆர்வத்தோடு கஞ்சா விற்பனைதொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கொடுத்துள்ளான் . இதை போதை வியாபாரிகளுக்கு காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளே போட்டுக்கொடுத்துள்ளனர் .அது தான் எனது மகன் கொலையாக காரணம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் மேலும் சோமங்கலம் பகுதி ஏரி புறம்போக்கு நிலங்களை ஆக்ரமித்த பிளாட் போட்டு நில மாபியாக்களை இளம் செய்தியாளர் மோசஸ் தனது தொலைக்காட்சி செய்தியின் மூலம் அம்பலப்படுத்தி வந்தார்.போதை பேர்வழி கள் நில ஆக்ரமிப்பாளர்கள் என்று பல்வேறு தரப்பினர் கூலிப்படை மூலமாக இந்த படுகொலையை நிகழ்த்தி யுள்ளனர்
இந்த படுகொலைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் இந்த கொலைக்கு காரணமாக இந்த 3பேர் கொண்ட போதை கும்பல் சிக்கியுள்ளது தப்பியோடிய முக்கிய புள்ளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கொலைமிரட்டல் புகார் வந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தால் ஒரு இளம் செய்தியாளரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பது அப்பகுதி மக்கள் கருத்தாகும்.மேலும் படுகொலையான செய்தியாளரிடம் குடும்பத்தினருக்கு அவர்களின் ஏழ்மை நிலை கருதி உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் அரசு வழங்கும் என்று செய்தியாளர் அமைப்புகளின் கோரிக்கையாகும்