மாதவரம் சுதர்சனத்தின் தொகுதிகள் பறிப்பு


சென்னை மாவட்ட திமுகவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.புதிய மாவட்டங்களுக்கு இளைய அருணா  மயிலை வேலு ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் 


மாதவரம்,திருவொற்றியூர் ஆகிய தொகுதிகள் அடங்கிய சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு மாதவரம் எஸ். சுதர்சனம் மாவட்ட பொறுப்பாளராக செயல்படுவார் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்படி தற்போது மாவட்ட செயலாளராக உள்ள சுதர்சனத்திடமிருந்து ஆர்கேநகர் ,ராயபுரம்  மற்றும் பெரம்பூர் தொகுதிகள் பறிக்கப்பட்டுள்ளது.அந்த தொகுதிகள் சென்னை வடக்கு மாவட்டமாக உருவாக்கப்பட்டு  ராயபுரத்தை சேர்ந்த தா.இளைய அருணா மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்


ராயபுரம் தொகுதி பொருளாளர் வடசென்னை  பொருளாளர் என்று திமுகவில் பொறுப்புகள் வகித்த இளைய அருணா மறைந்த திமுக எம்பி ஆலடி அருணா வின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடார் சமூகத்தை சேர்ந்த இளைய அருணாவுக்கு சொந்த ஊர்  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குளமாகும்


வடசென்னையைத்தொடர்ந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகள் அடங்கிய.சென்னை மேற்கு மாவட்டமாக மாற்றம் செய்யப்பட்டுஏற்கனவே உள்ள சிற்றரசு மாவட்ட பொறுப்பாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


மேற்கு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட தி.நகர் மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் கொண்ட சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்கு மயிலை தா.வேலு பொறுப்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.மயிலை வேலு தற்போது மயிலாப்பூர் திமுக பகுதி செயலாளராக இருந்து வருகிறார்