புயல் பாதிப்புகளை பார்வையிட வரும் 5 ஆம் தேதியன்றும மத்தியகுழு தமிழகம் வர இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி
புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய வரும் 5 ம் தேதி மத்திய குழு தமிழகம் வுருகிறது.தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயல் சின்னமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது. 2 ம் தேதி( இன்று) அதன் முழு செயல்பாடுகள் தெரிய துவங்கும். 4 ம் தேதி பாம்பன் குமரிக்கு இடையே கரையை கடக்கவாய்ப்பு உள்ளது.புயலின் தாக்கம் அதிகமாகஇருக்கக்கூடியகன்னியாகுமரியில் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும்,
திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் ஆக
மொத்தம் ஒன்பது குழுக்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறது
தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களிலும் மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய
தமிழக அதிகாரிகள் விரைந்துள்ளார்கள். ஆழ்கடலில் மீன்பிடித்துக்
கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகள்
கொடுக்கப்பட்டுள்ளது. புயல் வீசும் நேரத்திலும், புயல் வீசுவதற்கு
முன்பும் அதாவது ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை புயல் பாதிப்புகள்
இருக்கக்கூடும்.தென் மாவட்ட மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதை
தவிர்த்துக் கொள்ளவேண்டும்.புயல் உருவான பின்னர் புயல் நகரும் திசையைப்
பொறுத்து பேருந்து சேவையை நிறுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.