*டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் தொடர் போராட்டம்!*
மத்திய பா. ஜ. க..அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப்,ஹரியானா,உ.பி.விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற முழக்கத்துடன் டெல்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர்.டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அறிவித்துள்ளது சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகே நடைபெறும் ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார் சென்னை ஒட்டேரிபாலம் இந்தியன் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பாரிமுனை பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் அக்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை மூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் மு.சம்பத் மாவட்ட துணை செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்