நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் பிறகு பார்க்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்துள்ளார், ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த் கட்சி அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்,
வரும் டிசம்பர் 31 ம்தேதி கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட போவதாகவும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார், பெயரிடப்படாத தனது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி , மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்துள்ளார், பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த அர்ஜூன் மூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தது குறித்து பெரும் சர்ச்சைகள் உருவானது , சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவின் இன்னொரு கிளையாக தான் செயல்படும் என்று இளைஞர்கள் மிம்ஸ்களை வெளியிட்டனர்,
இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் புதுக்கட்சி அறிவிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் , அதற்கு அவர் ரஜினிகாந்த் முதலில் தனது கட்சியை பதிவு செய்யட்டும், பதிவு செய்தால் தான் அது கட்சியாகும் பின்னர் கருத்து சொல்கிறேன் என்று கிண்டலடித்துள்ளார், இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த்தின் அறிவிப்பை வரவேற்றுள்ளார், சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணிக்கும் வாய்ப்பு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் வேட்பாளர் அறிவித்தால் தகுதியான இடங்களை அதிமுக அவருக்கு தேர்தலில் வழங்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலில் குழந்தை பிறக்கட்டும் ஆணா பெண்ணா என்று பின்னர் பார்க்கலாம் என்று துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்,
இதற்கிடையே அதிமுகவின் அமைப்பு செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயகுமார், ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக கூறியுள்ளது ஒபிஎஸ் அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,