விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்


  


திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (3.12.2020) காலை, காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் லல


 


விவசாயிகளின் உணர்வுக் கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; விவசாயிகளின்  ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகராம்  டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற டிசம்பர் 5 (சனிக்கிழமை) அன்று காலை 10மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி, “ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று, கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம்  தீர்மானிக்கிறது இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


 


--