கொரோனா ஆய்வு கட்டண மர்மம் : கமல் திடீர் கேள்வி

 ஆர் டி பிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணத்தை மற்ற மாநிலங்களில் குறைவாக இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ரூ 3ஆயிரமாக தொடரும் மர்மம் என்ன என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்


இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு


ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்,