அதிமுக கூட்டணிக்கு ரஜினி ரெடி

ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்புக்கு துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.. ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் தம்பகுண்டு பகுதியில் துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்  .
சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக
அறிவித்துள்ளார்.இதனை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.அவரின் வரவு
நல்வரவாகட்டும்.
எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம்.வாய்ப்பு இருந்தால்
கூட்டணி அமையும்.ரஜினி வருகையால் எந்த விதத்திலும் அதிமுக வாக்கு வங்கி பாதிக்காது. என்று அவர் கூறினார், இதற்கிடையில்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் இன்னொரு முகமாக இருப்பதாகவும் அவர் யாரை தலைமை  ஒருங்கிணைப்பாளராக  நியமித்திருக்கிறாரோ அதன் மூலம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறாரோ என்ற சந்தேகம் நிலவுவதாக திருமாவளவன் கூறியுள்ளார்